search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்"

    ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்தில் சோதனைச் சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 போலீசார் உயிரிழந்தனர். #Talibankill #30policemenkill
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், அந்நாட்டின் மேற்கு பகுதியில் தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த ஃபரா மாகாணத்திற்குட்பட்ட காக்கி சஃபெட் மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனைச் சாவடி மீது நேற்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அம்மாவட்ட போலீஸ் கமிஷனர் உள்பட 30 போலீசார் உயிரிழந்தனர். 

    சுமார் 4 மணிநேரம் நீடித்த இந்த சண்டைக்கு பின்னர் அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களையும், வெடிப் பொருட்களையும் பயங்கரவாதிகள் அள்ளிச் சென்றதாகவும் எதிர் தாக்குதலில் 17 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Talibankill #30policemenkill
    தலிபான்களின் தாக்குதல் எதிரொலியாக நாளை நடைபெறும் ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் கந்தஹார் மாகாணத்தில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Afghanistanelections #Kandaharelectiondelay #Talibanattack
    காபுல்:

    249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு நாளை (20-ம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. 2500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் மோதும் இந்த தேர்தலில் சுமார் 89 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். சுமார் ஐயாயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அறிவுத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    கடந்த சில நாட்களில்இவர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் பத்துக்கும் அதிகமான வேட்பாளர்களும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

    இந்நிலையில், தலிபான்களின் கோட்டை என்று கருதப்படும் கந்தஹார் மாகாணத்தில் உள்ள  கவர்னர் அலுவலகத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கந்தஹார் மாகாணத்தின் காவல்துறை தலைவர் ஜெனரல் அப்துல் ரசிக், உளவுத்துறை தலைவர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். கவர்னர் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.

    வாக்குப்பதிவு தினமான நாளையும் (20-ம் தேதி) தலிபான்கள் இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களில் ஈடுபடலாம் என அங்குள்ள பொதுமக்களிடையே பீதி நிலவி வருகிறது.

    இதனைதொடர்ந்து, கந்தஹார் மாகாணத்தில் மட்டும் பாராளுமன்ற தேர்தல் ஒருவாரத்துக்கு பின்னர் நடத்தப்படும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் செய்தி தொடர்பாளர் இன்று அறிவித்துள்ளார். அங்கு வாக்குப்பதிவுக்கான தேதியை தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Afghanistanelections #Kandaharelectiondelay #Talibanattack
    ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பரா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தை கைப்பற்ற தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். #Talibanattack #Afghanarmybase
    காபுல்:

    இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு உள்பட்ட ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகள் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளை வேட்டையாட ஆப்கானிஸ்தான் படைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    மேலும், பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் மறைவிடங்கள் மீது உள்நாட்டு ராணுவம் மற்றும் சில வெளிநாட்டு விமானப்படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்த இருதரப்பு மோதலில் இந்த ஆண்டில் மட்டும் அப்பாவி பொதுமக்கள் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போர் நிலவரங்களை கண்காணித்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின் முகமை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மேற்கு பரா மாகாணம், புஷ்ட் ராட் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தை கைப்பற்றும் நோக்கத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நேற்று பின்னிரவு ஆவேச தாக்குதல் நடத்தினர்.

    வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் அவர்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 17 வீரர்கள் உயிரிழந்ததாகவும், அங்கிருந்த ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை பயங்கரவாதிகள் அள்ளிச் சென்றதாகவும், 11 வீரர்களை சிறைபிடித்துச் சென்றதாகவும் உள்நாடு ஊடகங்லள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Talibanattack #Afghanarmybase
    ×